பாஜக MP கௌதம் கம்பீர், தான் தனது குழந்தை பருவத்தில் இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய விரும்பியதாக தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் கடந்த சனிக்கிழமை இரவு நாரைனாவில் தியாகிகளின் குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், தான் குழந்தை பருவத்தில் இருந்தபோது இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். 


ஆனால் அதிர்ஷ்டம் தனது ஆசையை ஏற்காத காரணத்தால், தான் ஒரு கிரிக்கெட் வீரராக உருவெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கௌதம் கம்பீர் 12-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, ரஞ்சி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். அப்போது கிரிக்கெட் அவரது ஆசையினை திசை திருப்பியது, தன்னை ஒரு கிரிக்கெட் வீரராக மாற்றியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆனால் ஒரு கிரிக்கெட் வீரரான பிறகு கூட, தான் ஒரு இராணுவ வீரராக மாற வேண்டும் என எப்போதும் அவரது மனதில் ஆசை இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று, தியாகிகள் தங்கள் குழந்தைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைத்தால், அவர்களது ஆவி அவர்களின் சிந்தனையினை நிறைவேற்றும் எனவும் தெரிவித்துள்ளார்.
 
ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, கௌதம் கம்பீர் ஒரு இராணுவ வீரராக மாற முடியாவிட்டாலும், நாட்டில் தியாக வீரர்களின் குழந்தைகள் அவர்களது பெற்றோரின் சிந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சிந்தனையால் ஈர்க்கப்பட்ட அவர்கள் தியாகிகளின் குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்க முயற்சிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.


அதே நேரத்தில், நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தியாகியாக இருந்த வீரர்களின் குடும்பங்கள் கூடியிருந்தன. கூடியிருந்த மக்களின் மத்தியில் கம்பீர் பேசுகையில்., "நீங்கள் எந்தத் தொழிலில் இருந்தாலும், நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும், அதனையே உங்கள் பிள்ளைகளும் விரும்புகின்றனர்" என தெரிவித்தார்.