ரயில்களில் உடனடி பயணம் மேற்கொள்ள இருப்போர் ‘தட்கல்’ முறையில் குறிப்பிட்ட நேரத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. என்ற இணைய தளத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தட்கல் முறையில் முன்பதிவு செய்வதற்கான இணைய தளத்தில் போலி சாப்ட்வேரை பயன்படுத்தி ஏராளமான ரயில் டிக்கெட்டுகளை ஒரு கும்பல் முன்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் கிளம்பியுள்ளது.


இதுபற்றி சிபிஐ விசாரணை நடத்தியதில் ரயில்வேயில் பணியாற்றும் கம்ப்யூட்டர் ஊழியர் ஒருவர் இதில் மூளையாக செயல்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. அவரை சி.பி.ஐ. கைது செய்தது. 


இவரது போலி சாப்ட்வேரை உபி சேர்ந்த ரயில் டிக்கெட் முன்பதிவு ஏஜெண்டுகள் பலர் பயன்படுத்தி தினமும் நூற்றுக்கணக்கான டிக்கெட்டுகளை தட்கல் முறையில் முன்பதிவு செய்து இருப்பது தெரிய வந்தது.