உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதன் அடிப்படையில் காவல்துறையினர் கேள்வி எழுப்பி, அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பெண் ஒருவர் விமர்சித்த விடியோ ஒன்றை டெல்லியைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். 


இதனையடுத்து முதல்வர் மீது பொய்யான தகவலைப் பரப்புவதாகக் கூறி செய்தியாளரையும், ஆதித்யனாதை விமரிசித்த பெண்ணையும் லக்னோ காவல்துறை கைது செய்தது. பின்னர் டெல்லி நொய்டாவில் இயங்கிவந்த உள்ளூர் தொலைக்காட்சி அலுவலகத்திற்கும் சீல் வைத்தது.


இதனையடுத்து செய்தியாளரின் மனைவி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.


இந்த வழக்கை நேற்று நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை நாளை விரிவாக விசாரிப்பதாக கூறி ஒத்திவைத்தனர். இதன் அடிப்படையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, விசாரணையின் போது நீதிபதிகள் சரமாரியாக கேள்வியெழுப்பினார்.


"கருத்துவேறுபாடு இருக்கலாம் அதற்காக கைது நடவடிக்கையா? எந்த அடிப்படையில் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை கைது செய்தீர்கள்?" என கைது நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் செய்தியாளர் என்ன கொலைக் குற்றம் செய்துவிட்டாரா? ஒரு அவதூறு வழக்கிற்காக நீதிமன்ற காவலில் வைக்க அவசியம் என்ன? எனவும் கேள்வி எழுப்பினர்.


இந்திய குடிமகனின் சுகந்திரம் என்பது புனிதமானது. கருத்து சுகந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும், இது அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது, அதனை மீறக்கூடாது. பெருந்தன்மையை காட்டும் விதமாக பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியாவை விடுதலை செய்யுங்கள் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.