பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதை பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளுமா? UNGA-ல் இம்ரான் கானுக்கு இந்தியா தக்க பதிலடி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய நாடுகள் சபையின் 74 ஆம் ஆண்டு பொதுச் சபை (UNGA) கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. அதில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உரைக்கு இந்தியா சார்பில் இந்திய வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா (MEA) ஐ.நா-வில் பதிலளித்தார்.


அப்போது, அணுசக்தி பேரழிவை கட்டவிழ்த்து விடுவதாக கானின் அச்சுறுத்தல் இருப்பதாக மைத்ரா கூறினார். "அரசியல்வாதியாக அல்ல, ஆனால் அது பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கிறது என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளும்" என்று மேலும் கேட்டார். மேலும், உலக நாடுகளுக்கு அளித்த வாக்குறுதியை பாக்., காப்பாற்றி விட்டதாக காட்டிக் கொள்வதற்காக, பாகிஸ்தானில் எந்த பயங்கரவாத அமைப்பும் செயல்படவில்லை என்பதை சரி பார்த்துக் கொள்ள ஐ.நா., கண்காளிப்பாளர்களை தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைத்துள்ளார்.


UN-ல் தடை செய்யப்பட்ட 130 பயங்கரவாதிகள், UN கருப்பு பட்டியலில் உள்ள 25 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் இல்லை என்பதை பாகிஸ்தான் பிரதமரால் உறுதியாக சொல்ல முடியுமா? வரலாறு பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறோம். 1971-ல் தனது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக 1971 ஆண்டு பாகிஸ்தான் நடத்திய இனப்படுகொலையை மறந்து விடாதீர்கள். கிரிக்கெட் வீரராக இருந்து பிரதமரானவரின் இன்றைய பேச்சு, முரட்டுதனமான துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக எல்லை மீறியதாக உள்ளது.



பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி அளிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் நிதி நடவடிக்கை குழு பாகிஸ்தானை எச்சரித்ததை அவர்களால் மறுக்க முடியுமா?. நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவாக பேசியதை இம்ரான் கானால் மறுக்க முடியுமா? கட்டாய மதமாற்றம் போன்றவற்றால் 1947 ல் 23 சதவீதமாக இருந்த பாகிஸ்தான் சிறுபான்மையினர் எண்ணிக்கை தற்போது 3 சதவீதமாக சுருங்கி உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான இந்தியாவின் ஜனநாயகம், காஷ்மீர், லடாக் விவகாரம் ஆகியவற்றில் நடுநிலைத்தன்மை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாத கொள்கைகளை தொழிலாக கொண்டு செயல்படும் எவரும் இந்திய மக்களுக்காக பேச தேவையில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.