நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பசுமை வாயுக்களின் வெளியேற்றத்தைக் கருத்தில் கொண்டு படிப்படியாக பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் சில கொள்கை முடிவுகளை எடுத்துள்ள மத்திய அரசு, காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் சில கடுமையான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | PNG விலை உயர்வு, இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்


இந்நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல் வாகனங்கள் புதுபிக்கப்படுமா? என்பது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் சச்தேவா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, டெல்லி-என்சிஆர் பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய பெட்ரோல் கார்களின் பதிவை புதுப்பிக்க முடியாது என தீர்ப்பில் உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) பிறப்பித்த உத்தரவுகளை கருத்தில் கொண்டு, அத்தகைய வாகனத்தின் பதிவை புதுப்பிக்க அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.


என்.ஓ.சி வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லி மாநில அரசின் கொள்கையின்படி, என்ஜிடி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு வாகனத்தை மாற்றுவதற்கு மனுதாரர் தடையில்லாச் சான்றிதழை (என்ஓசி) பெறலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பில், என்ஜிடி மற்றும் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளை கருத்தில் கொண்டு, டெல்லி-என்சிஆரில் இயங்கும் நோக்கத்திற்காக 15 ஆண்டுகள் முடிந்த பிறகு பெட்ரோல் வாகனத்தின் பதிவை புதுப்பிக்க மனுதாரர் கோர முடியாது டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | LPG Cylinder: கேஸ் சிலிண்டரின் மேல் எழுதப்பட்டிருக்கும் இந்த எண்களின் அர்த்தம் தெரியுமா?


மேலும், 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களின் பதிவை தன்னிச்சையாகப் புதுப்பிப்பது தொடர்பாக டெல்லி அரசின் போக்குவரத்துத் துறை வெளியிட்ட பொது அறிவிப்பை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும், அதில் உரிய நிவாரணம் வழங்கக்கோரிய மனுதாரரின் கோரிக்கையையும் நிதிமன்றம் நிராகரித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR