இந்தாண்டு துவக்கத்தில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் தாக்குதல் நடத்திய விமானப்படையின் இரு படைப்பிரிவுகளுக்கு விமானப்படை தினமான இன்று விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபர் 8, 1932-ல் IAF உருவாக்கப்பட்டது, பல முக்கியமான போர்கள் மற்றும் மைல்கல் பயணங்களில் இந்த படை பங்கேற்றுள்ளது. இந்நிலையில் 'விஜய்தஷமி' நிகழ்வைக் குறிக்கும் விதமாக தீமைக்கு எதிரான நன்மையின் வலிமையையும் வெற்றியையும் இந்தியா கொண்டாடும் அதே நாளில் இந்த ஆண்டு IAF-ன் அடித்தள நாள் வருகிறது.


87-வது விமானப்படை தினத்தை முன்னிட்டு இந்திய விமானப்படை பல்வேறு நிகழ்ச்சிகளை கொண்டு ஆண்டு விழானை கொண்டாடுகிறது.



ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் நடந்த விமானப்படையின் அணிவகுப்பு மரியாதையை விமானப்படைத் தலைவர் ஏர்மார்ஷல் பதூரியா ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து விமானங்களின் வான் சாகசங்கள் நடந்தன. சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கும், படைப்பிரிவுகளுக்கும் விருதுகள், பரிசுகள் அளிக்கப்பட்டன.


பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், மிக்-21 பைஸன் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார். அபிநந்தன் ஓட்டிய மிக்-21 பைஸன் ரக விமானம், அமெரிக்கத் தயாரிப்பான பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 


அதன்பின்னர் மிக்-21 பைஸன் ரக விமானத்தை வானில் செலுத்தி சாகசங்களும் செய்தார்.


மூன்று மிராஜ் 2000 விமானங்கள், இரு சு-30 எம்கேஐ விமானம் ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மிராஜ் விமானங்களை இயக்கிய வீரர்கள் புஜாதே, கேப்டன் பி.ராய், கமாண்டர் பசோட்டா, சுகோய்30 விமானங்களை இயக்கிய பைலட் கே.பி.சிங், பரசுராம் ஆகியோருக்கும் விருது அளிக்கப்பட்டது.


பாலகோட் தாக்குதலில் தீவிரவாதிகள் முகாமை அழித்த அபிநந்தனின் நம்பர் 51 படைப்பிரிவு, நம்பர் 9 படைப்பிரிவு ஆகியவை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டன. பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட விமானப்படை வீரர்கள், குறிப்பாக அபிநந்தன் தலைமையிலான படைப்பிரிவுக்கு விருதுகள் அளிக்கப்பட்டது.