பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக, அபிநந்தன் வர்த்தமான் இடம்பெற்றிருந்த படைப்பிரிவுக்கு விமானப் படையின் கவுரவ விருது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: விங் கமாண்டர் அபிநந்தன் வர்தாமனின் 51 படைக்கு அக்டோபர் 8 ஆம் தேதி விமானப்படையின் 87 வது ஆண்டு விழா குறித்து இந்திய விமானப்படை (IAF) தலைவர் ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாரியா கவுரவ விருதை அறிவுறுத்தியுள்ளார்.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட் தீவிரவாத முகாம்களை, இந்திய விமானப் படை சர்ஜிகல் தாக்குதல் நடத்தி அழித்தது. இதற்கு பதிலடி கொடுக்க எண்ணி, கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி இந்தியாவின் வான் எல்லைக்குள் நுழைய பாகிஸ்தான் விமானப் படை முயன்றது. இதனால் நடுவானில் இருநாட்டு விமானப் படைகள் இடையே சண்டை ஏற்பட்டது. 


இதில் பாகிஸ்தானின் ஏப்ரல் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. மிக்21 பைசன் போர் விமானம் மூலம் அதை சுட்டு வீழ்த்தி வீர சாகசம் புரிந்த அபிநந்தன் வர்த்தமானுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானின் எப்16 விமானத்தை வீழ்த்தியதற்காக, அபிநந்தன் வர்த்தமான் இடம்பெற்றிருந்த 51-ஆவது படைப்பிரிவுக்கு யுனிட் சைட்டேசன் எனப்படும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


பாலகோட்டில் தாக்குதல் நடத்திய 9ஆவது படைப்பிரிவு மற்றும் சிக்னல் பிரிவு தலைவர் மிண்டி அகர்வாலுக்கும் இதே விருது வழங்கப்பட உள்ளது. 8ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய விமானப் படையின் 87ஆவது ஆண்டு விழாவின் போது இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. விமானப் படை தலைமைத் தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா இந்த விருதுகளை வழங்க உள்ளார்.