நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் நாள் கூடும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் நாள் துவங்கி ஜனவரி 8-ஆம் நாள் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் விஜய் கோயல் உறுதிப்படுத்தியுள்ளார். 


இதுதொடர்பாக இன்று மத்திய அரசு செய்தி தொடர்பகம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... "அடுத்த குளிர்கால கூட்டத்தொடர் ஆனது வரும் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் நாள் துவங்கி, 2019-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் நாள் வரை நடைபெறும் என்று பாராளுமன்ற விவகார அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளது." என குறிப்பிட்டுள்ளது.



உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாராளுமன்ற விவகார அமைச்சரவைக் குழு இயங்கி வருகிறது. இந்நிலையில் செய்வாய் அன்று இரவு சிங் அவர்களின் குடியிறுப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.


வழக்கமாக குளிர்கால கூட்டத்தொடர் ஆண்டின் நவம்பர் மாதம் நடைப்பெறும். எனினும் இந்தாண்டு நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இரண்டாவது கூட்டத்தொடர் ஆகும். இந்த ஆண்டு 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.