வரதட்சணைக்காக தாயும், 3 மாத குழந்தையும் உயிருடன் எரித்துக் கொலை!
வரதட்சணைக்காக தாய் மற்றும் 3 மாத பெண் குழந்தை உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு!!
வரதட்சணைக்காக தாய் மற்றும் 3 மாத பெண் குழந்தை உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு!!
உத்தரபிரதேசத்தில் வரதட்சணைக்காக தாய் மற்றும் 3 மாத பெண் சிசுவும் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதுடைய பெண் ஷப்னம், பழ வியாபாரம் செய்துவரும் முகமது காசிம் என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து, ஷப்னத்திடம் முகமது காசிமும், அவரது தாயும் ரூ.2 லட்சம் வரதட்சணை பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். வரதட்சணை கொடுக்கவில்லை என்பதால் அவரது மாமியார் அவரை அடுத்து, உதைத்து கொடுமை செய்து வந்துள்ளார். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு, இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, ஷப்னத்தின் சகோதரரான ஜாஹித் அலி ரூ. 1 லட்சம் ரொக்கப்பணத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளார். ஆனாலும், ஷப்னத்துக்கு எதிரான வரதட்சணை கொடுமை தொடர்ந்து நடந்து கொண்டே இருந்துள்ளது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் முகமது காசிமும், அவரது தாயாரும் சேர்ந்து ஷப்னம் மற்றும் அவரது 3 மாத பெண் குழந்தையை வீட்டிற்குள் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்தனர். எரித்த பின்னர் முகமது காசிமும் அவரது குடும்பத்தினர் 7 பேர் வீட்டிலிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சென்று எரிக்கப்பட்ட உடல்களை மீட்டனர். முகமது காசிம் மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேர் மீது போலீசார் கொலை மற்றும் வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து ராம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் பால் சர்மா கூறுகையில்; தப்பி ஓடிய குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில், தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.