சுக்மாவில் ஒரு பெண் உள்பட இரண்டு நக்சல்கல் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதி ஒன்றில் நக்சல்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடைப்பெற்ற தாக்குதலில் ஒரு பெண் உள்பட இரண்டு பேர் சுட்டுக் கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதி ஒன்றில் நக்சல்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடைப்பெற்ற தாக்குதலில் ஒரு பெண் உள்பட இரண்டு பேர் சுட்டுக் கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்!
சத்தீஸ்கர் மாநிலம் சின்டெல்னர் காவல்துறை சராங்கத்திற்கு உள்பட்ட தாத்மிலா மற்றும் மொம்பல்லி கிராமங்களுக்கிடையில் உள்ள காடுகளில் இந்த துப்பாக்கிச் சண்டை நடைப்பெற்றதாக காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் மீனா தெரிவித்துள்ளார்.
தத்மேல்லா மற்றும் மொம்பல்லி கிராமங்களுக்கு இடங்களுக்கு இடையே பாதுகாப்புப் படையினர் காவலில் ஈடுபட்ட போது இந்த துப்பாக்கிச் சண்டை துப்பாக்கிச் சண்டை நடைப்பெற்றுள்ளது.
CoBRA சிறப்பு பிரிவு மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து சுமார் 500 கி.மீ பரப்பில் காடுகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் இரண்டு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.
துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட ஒரு பெண் உட்பட இரண்டு மாவோயிஸ்டுகளின் உடலை ஆயுதங்களுடன் மீட்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் இன்னும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்!