இந்தியா கேட்-ல் நடைபெற்ற குடியரசு தினம் ஒத்திகைக்குள் நுழைந்து "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என முழக்கமிட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் உடனான போரில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்காக டெல்லியில் இந்தியா கேட்-ல் அமர் ஜவான் ஜோதி அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் குடியரசு தினம் மட்டும், சுதந்திர தினம் அந்த இடத்தில் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்நிலையில், வரும் 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தியா கேட்-ல் இதற்கான ஒத்திகை நடந்துள்ளது. அப்போது, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்கு வந்துள்ளார். இதையடுத்து, குடியரசு தினம் ஒத்திகைக்குள் நுழைந்த அந்த பெண் இந்தியா கேட் அருகே சென்று பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டுள்ளார்.  


இதை அடுத்து அவரைப் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது பெயர் சுல்தானா கான் என்றும், தான் ஹைதராபாதில் உள்ள நிசாமாபாத்திற்கு வந்துள்ளதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். மனநிலை சரியில்லாதவர் போல் இருப்பதால், அவரது குடும்பத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்வதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மேலும், இத சம்பவம் அப்பகுதியில் பெரும பரபரப்பை ஏற்படுத்துயுள்ளதால், காவல்துறையினர் இது கூர்த்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.