இண்டிகோ விமானத்தில் பிறந்த குழந்தைக்கு; வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்...
இண்டிகோவின் டெல்லி-பெங்களூரு விமானத்திற்குள் புதன்கிழமை பெண் ஒருவர் ஆண் குழந்தையை பிரசவித்ததாக விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோவின் (INDIGO) டெல்லி-பெங்களூரு (Delhi-Bengaluru) விமானத்திற்குள் புதன்கிழமை பெண் ஒருவர் ஆண் குழந்தையை பிரசவித்ததாக விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“டெல்லியில் இருந்து பெங்களூருக்கு 6E 122 டெல்லி - பெங்களூரு வழியில் எங்கள் விமானத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. மாலை 7:40 மணிக்கு விமானம் தரையிறங்கியது. அனைத்து செயல்பாடுகளும் இயல்பானவை. தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர். பெண்ணுக்கு முதலுதவி அளித்த விமான ஊழியர்களை வாழ்த்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | DGCA விமானங்களில் நடத்துகிறது Safety Audits: பயணங்களில் கூடியது பாதுகாப்பு!!
"டெல்லி-பெங்களூரு 6 இ 122 விமானத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியதில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது," என்று ஒரு விமானத் துறை வட்டாரம் PTIக்கு தெரிவித்துள்ளது.
தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர். இதனிடையே விமானத்தில் குழந்தை பிறந்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இண்டிகோ விமானத்தில் குழந்தை பிறந்துள்ளதை முன்னிட்டு அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இண்டிகோ விமானத்தில் இலவசமாக பயணிக்கும் சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ALSO READ | இந்த credit card மூலம் உணவக பில் பாதியாகும், இன்னும் பல சலுகைகள்: முழு விவரம் இதோ!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை உடனடியாக பதிவிறக்குங்கள்!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR