மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜாபாவா மாவட்டத்தில் உள்ள தாந்த்லா காவல்துறையின் கீழ் வரும் தேவிகர் கிராமத்தில் உள்ள சிலபேர் சேர்ந்து திருமணமான பெண்ணுக்கு கொடுத்த தண்டனையை பார்க்கும் போது மனிதகுலத்தின் மனிதநேயம் எங்கே செல்கிறது என்ற அச்சம் ஏற்ப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த திருமணமான பெண் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை காதலித்து உள்ளார். இது அந்த கிராமவாசிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கு தண்டனை என்ற பெயரில், தன் கணவரை தோளில் சுமந்தப்படி கிராமத்தை சுற்றி வரும்படி தண்டனை வழங்கியுள்ளனர்.


திருமணமான அந்த பெண் தன் கணவரை தோளில் சுமந்தப்படியே கிராமத்தை சுற்றி வந்துள்ளார். இந்த தண்டனை முடிந்தபின், கிராமத்தில் இருக்கும் சில வாலிபர்கள் அந்த பெண்ணுடன் மோசமாக நடந்துகொண்டனர். இதுக்குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


இந்த காணொளி வைரலானத்தை அடுத்து, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்ததுடன், இந்த கொடூரமான சம்பவத்துக்கு காரணமான இரண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளது.


 



இதுக்குறித்து போலிஸ் அதிகாரி வினீத் ஜெயின் கூறுகையில், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெண்ணை அவமதிக்க முயன்றனர். நாங்கள் இந்த வீடியோவை சோதனை செய்து வருகிறோம். குற்றச்செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம். மேலும் கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணை செய்து வருகிறோம். நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தற்போது வரை இந்த சம்பவம் குறித்து ஒரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.