வன்கொடுமை! கணவர் எதிரே பெண்ணை கூட்டு பாலியல் செய்து கும்பல்!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஐந்து பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கூட்டு பாலியல் செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஐந்து பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கூட்டு பாலியல் செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டதிலுள்ள தானகாஸி-அல்வார் நெடுஞ்சாலையில் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை, ஆள் இல்லாத இடத்துக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் கணவன் முன்னிலையில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாக பதிவு செய்த கும்பல், அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த ஐந்து பேருக்கு எதிராக எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.