உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் ரூபா சோனி. நான்கு மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்சை அழைத்த போது ஆம்புலன்ஸ் வர தாமதமாகி உள்ளது. இதனால் ரூபாவின் உறவினர்கள் அவரை ரிக்ஷாவில் அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிக்ஷா ஆளுநர் மாளிகையின் 13 வது நுழைவு வாயில் அருகே சென்ற போது ரூபாவுக்கு வலி அதிகமானதால் ரிக்ஷாவை அங்கேயே நிறுத்தி உள்ளனர். பின்னர் சுற்றி இருந்த பெண்கள் சேலையை வைத்து மறைத்துக்கொள்ள ஆளுநர் மாளிகை அருகிலேயே அவருக்கு குறைமாத பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையோடு அந்த பெண்ணும் மருத்துவமனைக்கு  அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | செந்தில் பாலாஜியின் தம்பி கைது இல்லை - அமலாக்கத்துறை


தற்போது அந்தப் பெண் நடு ரோட்டில் கிடத்தப்பட்டு திரை கட்டி பிரசவிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. பலரும் இந்த சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் ஷூவ்பால் யாதவ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். சரியான நேரத்தில் அழைத்தவுடன் ஆம்புலன்ஸ் வராததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் மாநிலத்தின் சுகாதார சேவைகள் வென்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாகவும், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ராஜ் பவன் அருகே பெண்ணுக்கு பிரசவம் நடந்திருப்பது வெட்கக்கேடானது என்றும் கடுமையாக சாடியுள்ளார்.



ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் அந்தப் பெண்ணின் உறவினர்கள் முதலில் அவருக்கு வலி வந்தவுடன் ஆம்புலன்ஸை அழைக்கவில்லை.. ரிக்ஷாவையே நாடி உள்ளார்கள்.. பிரசவ வலி அதிகமான பின்பு தான் இவர்கள் ஆம்புலன்ஸை அழைத்து இருக்கிறார்கள். அதன் பின்னர் 25 நிமிடங்கள் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்


நடுரோட்டில் கர்ப்பிணி பெண் குழந்தையை பெற்றெடுக்கும் போது சேலையால் மூடப்பட்டிருக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது


மேலும் படிக்க | ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறார் ஸ்டாலின்... உச்சமடையும் நீட் விவகாரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ