சிஆர்பிஎஃப் முகாம் மீது பெட்ரோல் குண்டுவீசிய பெண்! சிசிடிவி காட்சிகள் வைரல்
ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப். பதுங்கு குழி மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண்ணை அடையாளம் கண்டுக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள சோபூர் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பதுங்கு குழி அமைந்துள்ளது. நேற்று இரவு அந்த பதுங்கு குழி உள்ள சாலை வழியாக சென்ற புர்கா அணிந்த பெண் ஒருவர், பெட்ரோல் குண்டு வீசிவிட்டு ஓடியுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இந்த வீடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | வாழத் தகுதியற்ற நாடாக மாறுகிறதா ‘இலங்கை’! ராமேஸ்வரத்துக்கு படையெடுக்கும் இலங்கை மக்கள்
அந்த வீடியோவில் மக்கள் சாலையில் நடந்து செல்கின்றனர். அவர்களுடன் மர்ம பெண் ஒருவர் புர்கா அணிந்து நடந்து வருகிறார்.
அப்போது சாலையின் நடுவில் நின்றவாறு புர்கா அணிந்த பெண் தனது பையினுள் கைவிட்டு எதையோ தேடுகிறார்.
பின்னர் ஒரு பெட்ரோல் குண்டை அதிலிருந்து எடுக்கிறார். அதை அவர் பதுங்கு குழிக்குள் வீசிவிட்டு அங்கிருந்து ஓடிவிடுகிறார்.
மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை ஒரே தவணையாக வழங்கப்படுமா?
பதுங்குக் குழி தாக்கப்பட்டதை அடுத்து, அங்கு தீ பற்றி எரிகிறது. அங்குள்ள பணியாளர்கள் தண்ணீரை ஊற்றி அதனை அணைக்க முயற்சிக்கின்றனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் கூறுகையில், ''சோபூரில் உள்ள சிஆர்பிஎப் பதுங்கு குழி மீது நேற்று வெடிகுண்டு வீசிய பெண் அடையாளம் காணப்பட்டார். மேற்படியான விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார்" என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படி கணக்கீட்டில் பெரிய மாற்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR