ஜார்கண்ட் மாநிலம் ஜம்சட்பூர் நகரில், அரசு அதிகாரி என மிரட்டி ரூ.50000 கேட்ட போலி அதிகாரியை உள்ளூர் பெண்மனி செருப்பால் அடித்து விரட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்கண்ட் மாநிலம் ஜம்சட்பூர் நகரில் போலி அதிகாரி ஒருவர் தான் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரி எனவும், தனக்கு ரூ.50000 லஞ்சம் அளிக்க வேண்டும் எனவும் உள்ளூர் பெண்மனி ஒருவரை மிரட்டியுள்ளார். விவரம் அறிந்த அந்த பெண்மனி போலி அதிகாரியை செருப்பால் அடித்து விரட்டி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.


ராக்கி சர்மா என அறியப்படும் அந்த பெண் இதுகுறித்து தெரிவிக்கையில்., கொத்சிலா பகுதியின் சௌகிலா பகுதியை சேர்ந்தவர் பெளேந்த்ரோ மேத்தா. மேத்தா தான் ஒரு ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரி என கூறி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ராக்கி சர்மா வீட்டில் சோதனை நடத்தியுள்ளார். சோதனைக்கு பின்னர் அரசின் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டும் எனவும், அதற்கான சட்டபூர்வமான சிக்கல்களை உடைக்க ரூ.5000 அளிக்க வேண்டும் எனவும் நிர்பந்தம் செய்துள்ளார்.



மேத்தாவின் வேண்டுகோள் கேட்டு அதிர்ச்சி அடைந்த சர்மா ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் மேத்தாவிடம் சோதனைகான சான்றுகளை கேட்டுள்ளார் சர்மா, ஆவணங்களை கேட்க அமைதி காத்த மேத்தா மீது சந்தேகம் எழ தனது நண்பர்களுடன் உதவியுடன் மேத்தாவை அடித்து பிடித்து காவல்துறயிடம் ஒப்படைத்துள்ளார் ராக்கி சர்மா.


இதுகுறித்து காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில்., மேத்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணையின் போது மேத்தா போலி அடையாள அட்டை வைத்துக்கொண்டு அப்பாவி மக்களை மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.