பெண் ஒருவர் தனது குழந்தைக்கு ஒரே ட்வீட் மூலம் இரண்டே நாட்களில் பாஸ்போர்ட் பெற்றுள்ளார்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அக்ஷதா என்பவர் ஜெர்மனியில் வசித்து வருகிறார். இவர் தனது பிரசவத்திற்காக இந்தியா வந்துள்ளார். பின்னர், அவருக்கு கர்நாடகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அவர் தனது குழந்தையுடன் அவர் ஜெர்மனி செல்வதற்காக பாஸ்போர்ட் விண்ணபித்துள்ளார்.  


ஆனால், குழந்தைக்கு பாஸ்போர்ட் கிடைக்க தாமதம் ஆகிக்கொண்டே இருந்திருக்கிறது. இதையடுத்து, அவர் இதுபற்றி தனது ட்விட்டர் மூலம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுரவாஜூக்கு கோரிக்கை விடுத்தார். இந்த ட்விட்டர் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுரவாஜ் ட்விட்டர் செய்த இரண்டே நாளில் பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். 


இதை தொடர்ந்து அந்த குழந்தைக்கு இரண்டே நாட்களில் பாஸ்போர்ட் வழங்கியுள்ளனர். பஸ்போர்ட் கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்த அந்த குழந்தையின் தாய் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுரவாஜூக்கு தான் பாஸ்போர்ட் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும், எனது கோரிக்கைக்கு செவி சாய்ததற்க்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.