பெங்களூரு: பைக் டாக்சி ஓட்டுநர், பயணத்தின் நடுவில் சுயஇன்பம் செய்துக் கொண்டே, பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது. பயணத்தின் நடுவில், ஒரு கையால் வாகனத்தை ஓட்டிக் கொண்டே மற்றொரு கையால் சுயஇன்பம் செய்த டிரைவரின் அடாவடி பாலியல் தொந்தரவு அம்பலமாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூருவில் நடந்த இந்த பாலியல் தொந்தரவு அதிர்ச்சி சம்பவம் டிவிட்டர் மூலம் அம்பலமாகியுள்ளது. ட்விட்டரில் தான் அனுபவித்த பாலியல் தொந்தரவை ஆதிரா என்ற பெண் பகிர்ந்து கொண்டார். சவாரி முடிந்த பிறகும், டிரைவர் தன்னை எப்படி பின்தொடர்ந்தார் என்பதையும் அவர் டிவிட்டரில் வெளிப்படுத்தினார்.


மணிப்பூரில் வன்முறையில் இருந்து தப்பியவர்களுக்கு ஒற்றுமையைக் காட்டுவதற்காக மக்கள் கூடியிருந்த டவுன்ஹாலில் நடந்த போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற பெண், வீடு திரும்ப, ராபிடோ செயலியில் பைக் டாக்ஸியை முன்பதிவு செய்திருக்கிறார். பதிவுசெய்த செயலியில் இருந்து கிடைத்த தகவலில் இருந்து மாறுபட்டு, வேறு பைக் வந்தது.  


"ஆச்சரியம் என்னவென்றால், @rapidobikeappல் பதிவுசெய்த பைக், சர்வீஸிங்கில் உள்ளது என்பதை சொல்லி, டிரைவர் வேறொரு பைக்கில் வந்தார். அவருடைய ஆப் மூலம் எனது முன்பதிவை உறுதிசெய்துவிட்டு தான் பயணத்தைத் தொடர்ந்தேன்."


மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்ட மோசடியில் 58 கோடி ரூபாய் தோற்ற தொழிலதிபர்! மோசடி அம்பலம்


பயணத்தின் நடுவில், டிரைவர் ஒரு கையால் வாகனத்தை ஓட்டத் தொடங்கினார், மற்றொரு கையால் சுயஇன்பம் செய்தார். வேறு வாகனங்கள் எதுவும் இல்லாத தொலைதூரப் பகுதியில் இருந்த சூழ்நிலையில், பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்ந்ததாக அந்தப் பெண் தனது சமூக ஊடக கணக்கில் பகிர்ந்துள்ளார்.


தனிமையான இடத்தில் இருக்கும்போது அவரை தான் கண்டிக்க முடியவில்லை என்று அந்தப் பெண் கூறினார்.



“பயணத்தின் போது, வேறு எந்த வாகனங்களும் இல்லாத தொலைதூரப் பகுதியை அடைந்தோம். அதிர்ச்சியூட்டும் வகையில், டிரைவர் ஒரு கையால் சவாரி செய்து தகாத நடத்தையில் ஈடுபட்டார் (பைக்கை ஓட்டும் போது சுயஇன்பம்). எனது பாதுகாப்புக்கு பயந்து, பயணம் முழுவதும் நான் அமைதியாக இருந்தேன்”.


டிரைவரின் பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிப்பதற்காக, தான் இறங்க வேண்டிய இடத்திற்கு 200 மீட்டர் முன்னதாகவே அந்தப் பெண் இறங்கிவிட்டார். ஆனால், அந்த டிரைவர், பயணம் முடிந்த பிறகும் அவளுக்கு வாட்ஸ்அப்பில் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி அனுப்பத் அனுப்பத் தொடங்கிவிட்டார்.


பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட் ஒன்றில், அந்த பெண்ணுக்கு, ஓட்டுநர் லவ் யூ என்று சொல்வதை பார்க்க முடிகிறது. அதிராவின் ட்வீட் வைரலான பிறகு, பெங்களூரு காவல்துறையின் அதிகாரப்பூர்வ கணக்கு, குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பயனரின் தொடர்பு விவரங்களைக் கேட்டறிந்தது.



டிரைவரை போலீசார் கைது செய்தனர்
பெங்களூரு நகர காவல்துறை வெளியிட்ட ட்வீட்டில், "இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்க @sjparkps க்கு தெரிவித்துள்ளோம், தயவுசெய்து உங்கள் தொடர்பு எண்ணை டிஎம் செய்யவும்" என்று கேட்டுக் கொண்டிருந்தது.


இதுகுறித்து அதிரா சனிக்கிழமை (ஜூலை 22) போலீஸில் புகார் அளித்ததாகவும், டிரைவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். ராபிடோ பைக் டாக்ஸியிடம் விசாரணை நடத்துவதாக தெரியவந்துள்ளது.


"இது @rapidobikeapp உடனான ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல, அதோடு, ஓட்டுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், Rapidos இன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தவும் நான் உறுதியாக இருக்கிறேன்," என்று போலீஸ் தெரிவித்துள்ளது.


இந்த ஆண்டின் தொடக்கத்தில், 30 வயது பெண் ஒருவர், ஓட்டுநர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதால், அவர் சென்றுக் கொண்டிருந்த ரேபிடோவில் இருந்து குதித்தார்.


மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை... இன்று மீண்டும் ஆஜர் - இதுவரை நடந்தது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ