சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம்; பிரச்சனை இல்லை: தேவசம் போர்டு
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தாங்கள் ஏற்பதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தாங்கள் ஏற்பதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுப்பெண்களும் செல்லாம் என்று சென்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பாஜக மற்றும் இந்து அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். சபரிமலை விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசிலனை செய்யுமாறு கிட்டத்தட்ட 51 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் சபரிமலை குறித்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அவசர வழக்காக எடுத்து விசாரிக்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
இந்த நிலையில், இன்று சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அனைவரும் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தனர். அப்பொழுது தேவசம் போர்டு தரப்பில், சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாகவும், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று தேவசம் போர்டு தரப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டது.