பொதுவாக சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வழிபட செல்வதற்கு அனுமதிக்கப் படுவதில்லை என்ற நடைமுறையை தேவசம் கடைபிடித்து வருகிறது. இது இன்று, நேற்று அல்ல, பல காலங்களாக தொடர்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் மட்டுமில்லை, சனி சிங்னாபூர், ஹாஜி அலி தர்கா உட்பட பல வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற பரப்பு இருந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சனி சிங்னாபூர், ஹாஜி அலி தர்கா உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில், பெண்களை அனுமதிக்கக் கோரி தேசாய் தலைமையில் பல போராட்டங்கள் நடத்தபட்டது. நீதிமன்றம் வரை வழக்கு சென்றது என்பது அனைவரும் அறிந்ததே.


இந்நிலையில் சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, பலநாட்களாக நிலுவையில் இருந்து வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்பொழுது நீதிபதிகள், சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்களைப் போல் வழிபட பெண்களுக்கும் உரிமை உண்டு எனவும், சபரிமலையில் பெண்களை வழிபட மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், இது தனிமனிதனின் உரிமை மீறும் செயல் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தன.


இன்று தொடர்ந்து நடைபெற்ற இந்த வழக்கில், சபரிமலை தேவசம் நிர்வாகம் தரப்பில், சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க முடியாது. மாதவிடாய் காரணமாக சபரிமலையின் புனிதத்தன்மை கெட்டுவிடும். மேலும் தொடர்ந்து 48 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பது என்பது பெண்களால் முடியாது காரியம் என தெரிவித்தனர்.