ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் 36 ஆண்டுகளாக ஒரு பெண் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்தார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்த்யிருக்கிறது. குடும்ப வன்முறை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிணைக்கப்பட்டு இருந்த பெண் அரசு சாரா நிறுவனத்தால் மீட்கப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள அந்த பெண் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண், இயல்பு நிலைக்குத் திரும்ப சில வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் துண்ட்லாவில், கடந்த 36 ஆண்டுகளாக குடும்ப உறுப்பினர்களால் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார் அந்தப் பெண். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணை, பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ அஞ்சுலா மஹூரின் தலைமையில் சேவா பாரதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் விடுவித்தது. அந்த பெண் ஆக்ராவில் உள்ள மனநல மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.


மேலும் படிக்க | வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கேட்டு கையெழுத்து இயக்கம்


மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண், 17 வயது முதல் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது குடும்ப வன்முறையில் இருந்து மீட்கப்பட்ட அந்தப் பெண் விடுவிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 17 வயது முதல் 36 ஆண்டுகளாக சங்கிலிக்குள் அடைபட்டுக் கிடந்த பெண்ணின் வயது தற்போது 53 ஆகும்.


இந்த விவகாரம் தொடர்பாக ஆக்ரா மனநல காப்பகத்தின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தினேஷ் ரத்தோர், பெண் குணமாக வாய்ப்புகள் உள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கிறார். "ஃபிரோசாபாத்தில் இருந்து 53 வயதுடைய பெண் மீட்கப்பட்டு இங்கு அழைத்து வரப்பட்டார். 36 ஆண்டுகளாக அவரை சங்கிலியால் பிணைத்து, குடும்பத்தினரே சிறை வைத்துள்ளனர். அந்தப் பெண்ணின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது" என்று மருத்துவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | சிட்டாய் பறக்கும் பூச்சிக்கு நோவக் ஜோகோவிச் என பெயர்: செர்பியா


மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட நேரத்தில் அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. "அந்தப் பெண் இங்கு அழைத்து வரப்பட்டபோது மிகவும் மோசமான நிலையில் இருந்தார். ஆடை மிகவும் அழுக்காக இருந்தது. என்.ஜி.ஓ உறுப்பினர்கள் அவளைக் குளிப்பாட்டி, சுத்தமான ஆடைகளை வாங்கிக் கொடுத்தார்கள். தற்போது அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் விரைவில் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம். சில வாரங்களில் குணமாகிவிடும் வாய்ப்பு உள்ளது" என்று டாக்டர் ரத்தோர் கூறினார்.


36 ஆண்டுகளாக ஒரே அறையில் சங்கிலியால் அடைத்து வைக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு, கதவு இடுக்கின் வழியாகவே உணவு வழங்கப்பட்டது என கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர். 17 வயதில் இளமையாக இருக்கும்போது சங்கிலியில் பிணைக்கப்பட்டு சிறை வைக்கப்பட்ட பெண், 53 வயது முதியவராக விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கும் செய்தியாக உள்ளது. 


மேலும் படிக்க | இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மிகவும் பிடித்த வைர நகை விற்பனையில் சாதனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ