திறமையானவர்களாக செயல்படுவது எவ்வாறு என்பது குறித்து, பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவைச் அவைகயில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாஜக எம்.பிக்கள், அவைக் கூட்டத்தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் வகையில் பயிற்சி அளிக்க பாஜக தலைமை ஏற்பாடு செய்திருந்தது. இந்த இரண்டு நாள் பயிற்சி முகாம் டெல்லியில் சனிக்கிழமை துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது.  


இந்நிலையில், நேற்று நடைபெற்ற பயிற்சி முகாமில், திறமையானவர்களாக செயல்படுவது எவ்வாறு என்பது குறித்து, பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனைகளை வழங்கினார். இதுகுறித்து உறுப்பினர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி; பாஜக எம்பிக்களுக்கு நாடாளுமன்ற நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து அறிவுரைகளை வழங்கினார். 


மேலும், பாஜக எம்.பிக்கள் தங்கள் வெற்றிக்காக பாடுபட்ட ஆதரவாளர்களுடன் பிணைப்பில் இருக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா அமைப்பு விரிவாக்கம் குறித்தும், தேசியவாதம், காந்திய சமத்துவம், மதநல்லிணக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய கட்சியின் ஐந்து முக்கிய குறிக்கோள்கள் குறித்தும் உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.


இதனிடையே முதல் நாள் பயிற்சி முகாமின் போது பாஜக உறுப்பினர்கள் பாடல் பாடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பாஜக எம்.பியும் மத்திய இணை அமைச்சருமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோ, பெங்காலி பாடல் ஒன்றை பாட, ராஜ்யவர்தன் ரத்தோரும், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியும் அந்த பாடலின் இந்தி பதிவை பாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.