வோக்ஹார்ட் மருத்துவமனையில் பணிபுரியும் 26 செவிலியர்கள் மற்றும் மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையின் அக்ரிபாடாவில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனையில் பணிபுரியும் 26 செவிலியர்கள் மற்றும் மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்., மருத்துவமனை முழுவதுமாக அடைக்கப்பட்டது. மேலும் பிரஹன்மும்பை மாநகராட்சி (BMC) ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்தது.


BMC-யின் கூடுதல் நகராட்சி ஆணையர் (சுகாதாரம்) சுரேஷ் கக்கானி., மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் சோதனைக்கு எதிர்மறையை சோதிக்கும் வரை பணியாளர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டர் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது மருத்துவமனை நிர்வாகத்தின் தவறு, இதன் காரணமாக கிட்டத்தட்ட 300 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு மருத்துவமனை அமைப்பில் இவ்வளவு பேர் மத்தியில் வைரஸ் எவ்வாறு பரவியது என்பதை ஆராய ஒரு குழுவையும் நாங்கள் அமைத்துள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், கோவிட் -19 நேர்மறை செவிலியர்கள் மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக, தொற்று மற்ற ஊழியர்களுக்கும் பரவியது என்று குற்றம் சாட்டினர். மார்ச் 20 அன்று கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் இருந்து சந்தேகத்திற்கிடமான மற்றும் நேர்மறை கோவிட் -19 நோயாளிகள் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். 


உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் வைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் சந்தேக நபர்கள் பொது ICU வார்டுகளில் வைக்கப்பட்டனர், இதன் காரணமாக தற்போது கோவிட் -19 அல்லாத நோயாளிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.