Covid தடுப்பூசி உற்பத்தி-விநியோகத்தில் இந்தியா அபாரம் - உலக வங்கி பாராட்டு
சர்வதேச அளவில் பங்காற்றிய இந்தியாவுக்கு உலக வங்கி பாராட்டு! இந்தியாவின் சாதனை!!
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகின் மெகா தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்ட தடுப்பூசி இயக்கம் மூலம் இந்தியா பெருமளவிலான மக்களுக்கு தடுப்பூசியை கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறது. இதற்கு உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனுக்கு சென்றுள்ள உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனையில் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து நேற்று விவாதித்தனர்.
அப்போது, இந்தியாவில் செயல்படுத்தி வரும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டிய உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ், இந்த சீரிய பணிக்காக இந்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.
READ ALSO | கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ5000 வீதம் 3 ஆண்டுக்கு நிதியுதவி
கொரோனாவை தடுக்கும் முழுமுதல் காரணியான தடுப்பூசி உற்பத்தியிலும், விநினியோகத்திலும் இந்தியாவின் சர்வதேச பங்களிப்பு குறித்து பேசிய அவர், இதற்காக இந்தியாவுக்கு பாராட்டும், நன்றியையும் தெரிவித்தார்.
அப்போது, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடான இந்தியா, கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதாக மத்திய சுகாதார அமைசர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளதையும் குறிப்பிட்ட உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ், கொரோனா தடுப்பூசி தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு இந்தியா அளித்து வரும் பங்களிப்பை பாராட்டினார்.
READ ALSO | கொரோனா மரணங்களுக்கு ஒன்றிய அரசே இழப்பீடு வழங்க வேண்டும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR