சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு!
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 70 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச பொருளாதார அமைப்பின் மாநாடு சுவிட்சர்லாந்தின் தாவோஸில் இன்று தொடங்குகிறது.
சர்வதேச பொருளாதார அமைப்பின் மாநாடு சுவிட்சர்லாந்தின் தாவோஸில் இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, தாவோஸ் புறப்பட்டுச் சென்றார். பொருளாதார அமைப்பின் மாநாட்டில், சர்வதேச அளவில் இந்தியா திட்டமிட்டுள்ள எதிர்கால செயல்பாடுகள் குறித்து பகிர்ந்து கொள்ள உள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். இப்பயணத்தின் போது ஸ்விட்சர்லாந்து அதிபரையும் பிரதமரையும் மோடி சந்தித்து பேச உள்ளார்.
இதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி விருந்தளிக்க உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.