வெகு விமர்சையாக நடைப்பெற்ற `உலக தெலுங்கு மாநாடு`!
மாலை ஆறு மணியளவில் துணைத் ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் இளவரசர் வருகையின் போது பேரானி நடனம் ஆடி கலைஞர்கள் அவர்களை வரவேற்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள எல்பெ ஸ்டேடியத்தில் நேற்று (வெள்ளி) மாலை 6 மணியளவில் உலக தெலுங்கு மாநாடு தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் வானவேடிக்கைகள் மற்றும் லேசர் மின்விளக்குகள் அணைவரையும் ஈர்த்தது.
தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றார். இந்நிகழ்வின்போது, தெலுங்குதேச ஆளுநர் நரசிம்மன், மகாராஷ்டிர கவர்னர் வித்யாசாகர் ராவ் மற்றும் தெலுங்கானா மாநில அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நாடெங்கிலும் இருந்து கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய எழுத்தாளர்கள், அறிஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
மாலை ஆறு மணியளவில் துணைத் ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் இளவரசர் வருகையின் போது பேரானி நடனம் ஆடி கலைஞர்கள் அவர்களை வரவேற்றனர்.
பின்னர், ஆந்திரா முதல்வர் கே.சி.ஆர். அவர்களின் குழந்தைப் பருவ ஆசிரியரான முருதஞ்சய ஷர்மா பாடுபீவனத்திற்கு வந்தார். இலக்கிய அகாடமி தலைவர் நந்தினி சித்தா ரெட்டி ஸ்வாபோபத்தனை வழங்கினார். நிகழ்ச்சியில் அவரது சொந்த பாணியில் கவிதை, மற்றும் பழமொழிகள் பற்றி கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்.
பின்னர், கவர்னர் ஜி. வித்யாசாகர் ராவ் மற்றும் கவர்னர் நரசிம்மன், கே.சி.ஆர். அவர்கள் நிகழ்ச்சியில் தெலுங்கில் பேசி அசத்தினர். தெலுங்கில் முதல் முறையாக ஹைதராபாத் எம்.பி. அசதுத்தீன் ஓவோய்சி பேசினார். அதன்பின்னர், துணைத் ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்புறையாற்றினார்.