புதுடில்லி: கடந்த ஜூன் 3 ஆம் தேதி இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக விமானம் அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்காட்டிலிருந்து 12:24 மணிக்கு புறப்பட்டு விமானம் அருணாசல பிரதேச மாநிலம் மெசுகாவில் உள்ள ராணுவ தளத்த்தில் தரையிறங்க வேண்டி இருந்தது. ஆனால் திடிரென அருணாச்சல் பிரதேசத்தின் வான்பகுதியில் விமானம் ரேடார் இணைப்பில் இருந்து காணாமல் போனது. இந்த சம்பவம் சுமார் மதியம் 1 மணிக்கு நடந்துள்ளது. இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் சென்றதாக கூறப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 மற்றும் சி 130 ஸ்பேஸ் ஒப்ஸ் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் மாயமான ஏ.என். 32 விமானத்தை கடந்த ஒரு வாரமாக தேடி வந்தனர்.


இந்தநிலையில், அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட்டம் கட்டி என்ற கிராமம் அருகே, மாயமான ஏ.என். 32 ரக போர் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 


இந்த தகவலை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தி உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் லியோபாவின் வடக்கே 16 கி.மீ., தூரத்தில் 12,000 அடி உயரத்தில் AN-32 விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்த Mi-17 ஹெலிகாப்டர் மூலம் மாயமான ஏ.என். 32 விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டு எனவும் இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறினார்கள்.