மல்யுத்த வீராங்கனைகள்: பபிதா போகட் மீது சாக்ஷி மாலிக் வைக்கும் 5 குற்றச்சாட்டுகள்!
Wrestlers Protest: பபிதா போகத் மல்யுத்த வீரர்களை தனது சுயநலத்திற்காக பயன்படுத்துவதாகவும், தனது எதிர்ப்பை பலவீனப்படுத்துவதாகவும் சாக்ஷி மாலிக் குற்றம் சாட்டினார்
புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் வீராங்கனையுமான பபிதா போகட், மல்யுத்த வீரர்களை தனது சொந்த நலனுக்காக பயன்படுத்துவதாகவும், தன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருப்பதாகவும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.
பபிதா போகட் மீது சாக்ஷி மாலிக் வைக்கும் குற்றச்சாட்டு என்ன?
பபிதாவும், மற்றொரு பாஜக தலைவர் தீரத் ராணாவும் ஜந்தர் மந்தரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்த முதலில் அனுமதி பெற்றதாகவும், பின்னர் அங்கு போராட்டம் நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியதாகவும் சாக்ஷியும் அவரது கணவர் சத்யவ்ரத் காடியனும் சனிக்கிழமையன்று வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தானும் பபிதாவும் ஆரம்பத்தில் போராட்டத்தைத் தொடங்கவும் முயற்சிக்கவில்லை, அதேபோல அதை நீர்த்துப்போகவும் முயற்சி எதையும் செய்யவில்லை என்றும் ராணா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மல்யுத்த வீரர்கள் நாட்டின் பெருமை என்றும், விளையாட்டு வீரர்களின் கவுரவம் பாஜகவுக்கு உயர்ந்தது என்றும் அவர் கூறினார். அந்த வீடியோவில் ராணா, 'மல்யுத்த வீரர்கள் நாட்டின் பெருமை, விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் பாஜகவு கவனமாக உள்ளது. நானும் அவர்களை மிகவும் மதிக்கிறேன். நான் எப்போதும் வீரர்களை ஆதரித்து வருகிறேன்’ என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | Wrestlers Protest: மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக களம் இறங்கிய மல்யுத்த வீரர்கள்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டி, அவரை கைது செய்யுமாறு சாக்ஷி, வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு, பபிதாவும் ராணாவும் ஜந்தர் மந்தர் காவல் நிலையத்தில் அனுமதி பெற்றதாகக் கூறப்படும் கடிதத்தையும் காடியனும் சாக்ஷியும் காட்டினார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று (ஜூன் 18 ஞாயிற்றுக்கிழமை) ட்வீட் செய்த சாக்ஷி, 'வீடியோவில் (சனிக்கிழமை), நாங்கள் தீரத் ராணா மற்றும் பபிதா போகட் ஆகியோரை கிண்டல் செய்தோம், அவர்கள் எப்படி மல்யுத்த வீரர்களை தங்கள் சொந்த நலன்களுக்காக பயன்படுத்த விரும்புகிறார்கள் மற்றும் மல்யுத்த வீரர்கள் சிக்கலில் இருக்கும்போது, அவர்கள் அரசாங்கத்திற்கு உதவி செய்தார்கள்' என்றார்.
ஆனால், மல்யுத்த வீரர்களை தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை ராணா நிராகரித்தார்.
மேலும் படிக்க | NO POCSO: போக்சோ வழக்கில் ஆதாரம் இல்லை! பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு க்ளீன் சிட்
'போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு மல்யுத்த வீரர்கள் என்னை வந்து சந்தித்தனர், அவர்கள் வஞ்சிக்கப்பட்டதாக எங்களிடம் சொன்னார்கள். நாங்கள் எங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களுடன் இருக்கிறோம் என்று சொன்னோம். நீதிக்கான போராட்டத்தில் வீரர்களுடன் நான் இருக்கிறேன். நான் முன்பும் அவருடன் இருந்தேன் இப்போதும் அவருடன் இருக்கிறேன்’ என்று ராணா கூறுகிறார்.
வினேஷ் போகட்
பிரிஜ் பூஷனுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் மூன்று முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவரான வினேஷ், சமூக ஊடகங்களில் முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டு "எங்கள் போராட்த்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டாம்" என்று வலியுறுத்தினார்.
ஹெவிவெயிட் மல்யுத்த வீரர் காடியன் தனது போராட்டம் அரசியல் உள்நோக்கம் இல்லை என்றும் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல என்றும் சனிக்கிழமை கூறியிருந்தார்.
மேலும் படிக்க | PAN Card: ஆதார் அட்டை மூலம் பான் கார்ட் முகவரியை மாற்றுவது எப்படி?
சாக்ஷி மாலிக்கின் கணவர் காடியன் என்ன சொன்னார் தெரியுமா?
சத்யவ்ரத் காடியன் கூறுகையில், 'எங்கள் இயக்கம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் உருவாக்குகிறாஅர்கள். எங்களின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன். நாங்கள் ஜனவரி மாதம் ஜந்தர் மந்தரில் உள்ள போராட்ட இடத்திற்கு வந்தோம், இரண்டு பாஜக தலைவர்கள் காவல்துறையிடம் அனுமதி பெற்றிருந்தனர். ஜந்தர் மந்தர் காவல் நிலையத்தில் அனுமதி பெற்றதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அந்த அனுமதியை வாங்கியது, பாஜக தலைவர்கள் தீரத் ராணா மற்றும் பபிதா போகட் என்பதற்கான ஆதாரமே எங்களிடம் உள்ளது.
நாடாளுமன்றத்தின் புதிய கட்டிட திறப்பு விழா தினத்தன்று, மல்யுத்த வீரர்கள் அங்கு பேரணியாக செல்ல முயன்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஒரு நாள் கழித்து, எதிர்ப்பு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீசுவதற்காக ஹரித்வார் சென்றார்கள்.
ஹரித்துவாரில் கங்கை நதியில் மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வீசியிருந்தால் வன்முறை நடந்திருக்கும் என்பதை மறுத்த ராணா, ஆனால் வீரர்கள் அத்தகைய நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று மக்கள் விரும்பினார்கள் என்று கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ