தாய்நாட்டில் பணிபுரிய அமெரிக்கா வேலையை விட்ட யாதகிரி!
ஐதராபாத்தில் கூலி தொழிலாளியின் மகன் அமெரிக்க நிறுவனத்தில் கிடைத்த வேலையை புறகணித்து வைத்து விட்டு ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள சிமெண்டு தொழிற்சாலையில் கூலி தொழிலாளியாக இருப்பவர் பர்னானா கன்னையா. தினக்கூலியாக வேலை செய்யும் இவருக்கு தினமும் ரூ.100 கிடைக்கும். இவரது மகன் பர்னானா யாதகிரி.
ஐதராபாத்தில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தில் படித்து மென்பொருள் பொறியாளராக தன்னை வளர்த்து கொண்டார். இந்த படிப்பிற்கு ஆகும் செலவுக்கு இவரது தந்தை அதிக கஷ்டப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், யாதகிரிக்கு அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. கேட் தேர்வில் 93.4 சதவீதம் பெற்றதற்காக ஐ.ஐ.எம். இந்தூரில் பணிபுரியவும் இவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் இதனை எல்லாம் புறந்தள்ளி வைத்து விட்டு நாட்டிற்கு சேவை செய்யும் முடிவை அவர் எடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது: கார்ப்பரேட் உலகில் என்னை இணைத்து கொண்டு அதிக அளவில் சம்பளம் பெறும் வாய்ப்பு எனக்கு இருந்தது. ஆனால் அதில் எனது மனம் ஈடுபடவில்லை. தாய்நாட்டிற்கு பணி செய்து ஒருவருக்கு கிடைக்கும் மனதிருப்தியானது எவ்வளவு பணம் கிடைத்தும் ஈடு செய்ய இயலாதது என கூறியுள்ளார்.
டேராடூனில் நேற்று நடந்த அணிவகுப்பினை ராணுவ சீருடையில் யாதகிரி முன்னின்று நடத்தும்வரை தனது மகன் ஓர் அதிகாரி என கன்னயாவுக்கு தெரியவில்லை.