நாட்டு மக்களிடம் வரும் 21 ஆம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி...!
பிரதமர் நரேந்திர மோடி வரும் 21 ஆம் தேதி யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்...!
பிரதமர் நரேந்திர மோடி வரும் 21 ஆம் தேதி யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்...!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் 21 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். இது அரசு தொலைகாட்சியான தூர்தர்ஷன் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் காலை 6.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பப்படும். சீனாவுடன் நடந்து வரும் எல்லை மோதல் குறித்து விவாதிக்க ஜூன் 19 அன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள்.
கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு கர்னல் உட்பட இருபது இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இது ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நடந்த மிகப்பெரிய இராணுவ மோதலாகும், இது இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே நிலையற்ற எல்லை நிலைப்பாட்டை கணிசமாக அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மான் கி பாத் ஜூன் 28 ஆம் தேதி ஒளிபரப்பப்படும்.
இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது..... ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 21 உலகளவில் சர்வதேச யோகா தினமாக (IDY) கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் தற்போது கரோனா தொற்றுநோயைப் பற்றி கவலைபட்டு வரும் சூழ்நிலையில், யோகா மிகவும் பொருத்தமானது. ஏனெனில், யோகப் பயிற்சி உடல் மற்றும் மன நலனுக்கு வழிவகுக்கிறது. யோகா இணைய தளம், அதன் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி ஆகியவற்றின் வாயிலாக 45 நிமிட பொது யோகா நெறிமுறையைக் கற்க ஆயுஷ் அமைச்சகம் மக்களை ஊக்குவிக்கிறது. தூர்தர்சன் பாரதியில், பொது யோகா நெறிமுறையின் தினசரி ஒளிபரப்பு பிரச்சார் பாரதியால் ஜூன் 11, 2020 முதல் (காலை 08:00 மணி முதல் காலை 08:30 மணி வரை) தொடங்கப்பட்டது.
READ | வீட்டை விட்டு வெளியே வந்தால் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் - மோடி
இந்த நிகழ்ச்சி ஆயுஷ் அமைச்சகத்தின் சமூக ஊடகங்களிலும் காணக் கிடைக்கிறது. மின்னணு ஊடகம் மூலம், ஆடியோ - வீடியோ செயல் விளக்கத்தின் உதவியுடன் யோகா நெறிமுறைகளை பொதுமக்களுக்கு பழக்கப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். பொதுவான யோகா நெறிமுறைகளை முன்பே தெரிந்து கொள்வது, 2020 சர்வதேச யோகா தின நிகழ்வுக்கு மக்கள் முழுமையாக தங்களை தயார்படுத்திக் கொண்டு சுறுசுறுப்பாக பங்கேற்க உதவுவதுடன், உலகளவில் ஜூன் 21, 2020 ஆம் தேதி காலை 06:30 மணிக்கு தங்கள் குடும்பங்களுடன் தமது வீடுகளில் யோகா பயிற்சி மேற்கொள்ள உதவும்.
மேலும், அமைச்சகம் அதே நேரத்தில் ஒரு ஒளிபரப்பை நடத்துகிறது, அது ஒரு பயிற்சியாளர் தலைமையில் யோகா பயிற்சியை மக்கள் பின்பற்றி செய்ய வழிவகுக்கும், இது குறித்த விரிவான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். அத்துடன் பல பரிசுகளுடன் ஒரு வீடியோ போட்டியும் (என் வாழ்க்கை என் யோகா என்ற தலைப்பில் வீடியோ வலைதளப் போட்டி) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதில் மக்கள் வெவ்வேறு யோகாசனங்களை பயிற்சி செய்யும் அவர்களின் குறுகிய வீடியோ பதிவுகளை இடுகையிட ஊக்குவிக்கப்படுகிறார்கள்" என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.