ரயில் விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நிவாரண நிதி!!

உத்தர பிரதேச மாநிலத்தில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர் ரயில் நிலையம் அருகே நியூ ஃபரக்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 6 பெட்டிகள் தடம்புரண்டதில் தற்போது வரை 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்படி உத்தரவிட்டார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.