விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு யோகி ஆதித்யநாத் ஆண்டுக்கு ரூ .6,000 நிதி உதவி திட்டத்தை அறிவித்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'முத்தலாக்' நடைமுறையால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் வரை அவர்களுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மூன்று முறை தலாக் கூறி, மனைவியை விவாகரத்து செய்யும் இஸ்லாமிய நடைமுறைக்கு தடை விதிக்கும் முத்தலாக் தடை மசோதா மக்களவையில் மத்திய அரசு நிறைவேறியது. 


இந்நிலையில், முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் குறை தீர்ப்பு கூடத்தை உத்திரப்பிரதேச அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில், சுமார் 300-க்கும் அதிகமான இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டு, குறைகளை தெரிவித்தனர்.


இந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது; முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, வக்பு வாரியத்தின் சொத்துக்களில், உரிமை வழங்கப்பட வேண்டும். படித்த பெண்களுக்கு, கல்வித் தகுதி அடிப்படையில், அரசு வேலையும், பல்வேறு அரசு திட்டங்களின் கீழ், இருப்பிட வசதி மற்றும் கல்வி உதவி தொகையும் வழங்கப்பட வேண்டும்.


முத்தலாக் நடைமுறையால், கணவனை பிரிந்த இஸ்லாமிய பெண்களுக்கு, மறுவாழ்வு கிடைக்கும் வரை, ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவி தொகையும், வழக்கு விசாரணைக்கான உதவி தொகையும் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.