பாஸியாபாத்தில் இறைச்சி விற்க தடை - யோகி ஆட்டம் ஆரம்பம்!
உத்திர பிரதேசத்தின் பாஸியாபாத் மாவட்டத்தில் மதுபானங்கள், இறைச்சி விற்க தடை விதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது!
உத்திர பிரதேசத்தின் பாஸியாபாத் மாவட்டத்தில் மதுபானங்கள், இறைச்சி விற்க தடை விதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது!
உத்திர பிரதேசத்தின் பாஸியாபாத் நகரின் பெயரினை அயோத்தியா என அம்மாநில அரசு மாற்றியமைத்துள்ளது. இந்நிலையில் தற்போது அம்மாவட்டத்தில் மதுபானங்கள், இறைச்சிகளை விற்பதற்கு தடைவிதிக்க கோரி உள்ளூர் மடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக அயோத்தியாவில் தீபாவளியினை முன்னிட்டு நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்திர பிரிதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள்., உபி-யின் பாஸியாபாத் நகரம் இனி அயோத்தியா என அழைக்கப்படும் என அறிவித்தார். அப்போது, "அயோத்யா என்பது நமது அடையாளம். அது நமது பெருமை. கடவுள் ராமரின் அடையாளத்தை அது சுமந்து நிற்கிறது. எனவே அவரின் பெருமை என்றென்றும் நிலை நிறுத்த, இன்றிலிருந்து பாஸியாபாத் அயோத்யாவாக அழைக்கப்படும்' என குறிப்பிட்டார்.
இந்நிலையில் தற்போது உள்ளூர் மடாதிபதிகள் அயோத்தியா என பெயர்மாற்றம் செய்யப்பட்ட பாஸியாபாத்தில் மதுபானங்கள், இறைச்சி விற்க தடைவிதிக்க வேண்டுமென தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து உத்திர பிரதேச அரசின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் ஷர்மா தெரிவிக்கையில்... அயோத்தியா உள்ளூர் மடாதிபதிகளின் கோரிக்கைகளை மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது. அவர்களின் கோரிக்கைகளை சட்ட ரீதியாக நிரைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உள்ளூர் மடாதிபதி ஆச்சாரியா சத்தியேந்திர தாஸ் தெரிவிக்கையில்., அயோத்தியா என்பது புனிதமான இடம். அயோத்தியாவில் மதுபானங்கள், இறைச்சிக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் தற்போது பாஸியாபாத் அயோத்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அயோத்தியா என பெயர்மாற்றம் செய்யப்பட்ட பாஸியாபாத்திலும் இந்த நடைமுறை அமுல் படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.