உ.பி. அரசின் 100 நாள் சாதனை பட்டியல் : யோகி ஆதித்யாநாத் வெளியிட்டார்
கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து அங்கு யோகி ஆதித்யாநாத் முதல் - அமைச்சராக பதவி ஏற்றார். அவர் பதவியேற்றதும், அதிரடியாக பல அறிவிப்புகளும், திட்டங்களும் செயல்படுத்தினார்.
உ.பி., மாநிலத்தில் பாஜக அரசு பதவி ஏற்று 100 நாட்களில் ஆகிவிட்டது. இதனையடுத்து, 100 நாட்களில் ஒவ்வொரு அமைச்சகத்தின் சார்பாக வெளியான அறிவிப்புகள் மற்றும் செய்யப்பட்ட நலத்திட்டப் பணிகள் தொடர்பான சாதனை பட்டியல் அடங்கிய கையேட்டினை யோகி ஆதித்யாநாத் இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சியானது, விவசாயிகளின் நல்வாழ்வை ஒட்டியே அமைந்திருக்கும் என்பதால் விவசாயிகள் தொடர்பான நலத்திட்டங்களுக்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கும் என உ.பி., முதலைமைச்சர் யோகி ஆதித்யாநாத் கூறினார்.
விவசாயிகளின் 3.88 கோடி ரூபாயை வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அம்மாநில அரசு அறிவித்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.