உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ராம்நாயக் உத்தரவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பார் 2017-ஆம் ஆண்டு முதல் பாஜக  கூட்டணியில் உள்ளார். மக்களவைத் தேர்தலில் இவர் பாஜக சின்னத்தில் போட்டியிட நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில் அதனை மறுத்த அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்க மறுத்துவிட்டார்.


இந்நிலையில் தற்போது ஓம் பிரகாஷ் ராஜ்பாரை பதவி நீக்கம் செய்ய உபி முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஆளுநர் ராம் நாயக்குக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பேரில் ஆளுநர் ராம் நாயக் இன்று  ஓம் பிரகாஷ் ராஜ்பரை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.