வழி தவறிய பசுக்களை பாதுகாக்க தனி குழு அமைக்குமாறு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுரை...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான BJP ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் பசுக்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று உயர் அதிகாரிகளுடன், யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். அப்போது, தெருக்களில் ஆதரவற்று சுற்றித் திரியும் கால்நடைகளை பாதுகாக்க காப்பகங்கள் அமைப்பதற்கு தனி குழு ஒன்று  அமைக்கப்பட வேண்டும். அதற்கான பரிந்துரைகளை, மாநில தலைமை செயலர் ஒரு வாரத்தில் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 


இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஆக்கிரமிக்கப்பட்ட கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களை மீட்பதுடன் ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட பஞ்சாயத்து அளவில் தேவையான தீவனம், கொட்டகை மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய 750 கோசாலைகள் அமைக்கப்பட வேண்டும். இதற்காக, 16 மாநகராட்சிகளுக்கு, தலா 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். 


தெருக்களில் திரியும் கால்நடைகளுக்காக கோசாலை அமைப்பதற்கு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 1.2 கோடி ரூபாய் வழங்கப்படும். கோசாலைகள் அமைக்கப்படுவதை கண்காணித்து, அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.