லக்னோ பள்ளியில் கத்தியால் குத்தப்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவனை, தற்போது யோகி ஆதித்யநாத் மருத்துவ மனையில் சந்தித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்னோவில் உள்ள பிரைட்லேண்ட் பள்ளியில் படித்து வந்த ஒன்றாம் வகுப்பு மாணவன் கழிவறையில் கத்தி குத்து காயங்களுடன் இருந்துள்ளான்.  இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


இதையடுத்து, விவரம் அறிந்த பொதுமக்கள் அப்பள்ளியை சுற்றி வளைத்து, காயம்மடைந்து மாணவனை மருத்துவ மனையில் சேர்த்தனர்.


இதுபற்றி மாணவனின் தந்தை கூறும்பொழுது, எனது மகன் காயமடைந்த தகவலை பள்ளி நிர்வாகம் எங்களிடம் தெரிவித்தது.  அவனை 6-ம் வகுப்பு மாணவி கத்தியால் எனது மகனை தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


ஆனால் பள்ளி அதிகாரிகள், மாணவனின் உயிரிழப்புடன் நீல திமிங்கல விளையாட்டுக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


தற்போது, தாக்குதல் நடத்தியவர் பற்றியும் மற்றும் அது மாணவி என்பது பற்றியும் கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில், கத்தியால் குத்தப்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவனை தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவ மனையில் சந்தித்துள்ளார்.