500 ஆண்டுகளுக்குப் பிறகு, ராம் கோயிலுக்கு ஒரு நல்ல முகூர்த்தம் வாய்த்துள்ளது. அயோத்தி  நாட்டின் பெருமை  என உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

500 ஆண்டுகளுக்குப் பிறகு வாய்க்கும் இந்த நல்ல முகூர்த்தத்திற்காக, பலர் தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இதை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. நமக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது என்றார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.



அயோத்தி: ராம் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath), மறுஆய்வு செய்தார். கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்குப் பிறகு, ராம் பக்தர்களின் விருப்பம் நிறைவேறப் போகிறது. நாமர் கோவிலுக்கான பூமி பூஜையை பிரமாண்டமாக நடத்த சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த பூஜையில், மக்கல் மனதில் உள்ள இன மத பேதங்களை அழித்து விட்டது. அனைவரும் இந்த ராமர் கோவில் கட்டுமானத்தை வரவேற்கின்றனர். 


ALSO READ | IAF Western Air Command தலைவராக நியமிக்கப்படுகிறார்  ஏர் மார்ஷல் வி.ஆர். சவுத்ரி 


நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்தியாவின் 125 கோடி நாட்டு மக்கள் ஆவலுடன் காத்திருந்த அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவார். 


உலகம் அயோத்தியை திரும்பி பார்க்கும் வகையில் கோவிலை பிரம்மாண்டமாக கட்ட வேண்டும் என்று முதல்வர் கூறினார். இதற்கு தூய்மையை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றார். ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும் வகையில் நாளை முதல் தூய்மைக்கான சிறப்பு பிரச்சாரத்தை தொடங்குவோம் என்றார்.


அயோத்தி இல்லமால் தீபாவளியை கற்பனை செய்து பார்க்க முடியாது என்று கூறிய அவர், அதனால், ஆகஸ்ட் 4-5 தேதிகளில் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கோவிலிலும்  விளக்கு ஏற்றி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


ALSO READ | நம்மைக் காக்கும் காவலர்களை காக்கும் யோகா: சென்னை போலீசுக்கு ஆன்லைன் யோகா வகுப்புகள்!!


அனைவரும் கொரோனா தொடர்பான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார். நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமிருந்து வரும் மக்கள் இந்த பிரமாண்ட நிகழ்ச்சிகளைக் காண்பார்கள். இந்த பிரம்மாணடமான நிகழ்வின் மூலம் அயோத்தியின் பெருமையை உலகிற்கு பறை சாற்ற வேண்டும் என்றார்.