33 வயதான நபர் அவசர தொலைபேசி எண்ணான 100க்கு அழைப்பு விடுத்து,  பிரதமர் நரேந்திர மோடியை தாக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தார். அவரை கண்டறிந்து நொய்டா போலீஸ் கைது செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உள்ளுர் காவல் நிலையம் விரைந்து செயல்பட்டு, அந்த நபரை கண்டறிந்து கைது செய்தது.


குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், நொய்டா செக்டர் 66 -ல் வசிக்கும் ஹர்பஜன் சிங் ஆவார். இவர் ஹரியானாவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


ALSO READ |  எந்த நிபந்தனையும் இன்றி பெண்களுக்கு சொத்துரிமை உண்டு: தெளிவுபடுத்தி தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்!!


ஹர்பஜன் 100 எண்ணை அழைத்து பிரதமரை தாக்கப்போவதாக அச்சுறுத்தியிருந்தார். காவல் நிலையம் விரைந்து செயல்பட்டு, அந்த நபரைக் கண்டுபிடித்தது. பின்னர் அவர்  கைது செய்யப்பட்டார் என மத்திய நொய்டாவின் கூடுதல் காவல் ஆணையர் அங்கூர் அகர்வால் தெரிவித்தார்.


ALSO READ | காவியக் காதல்: உண்மை காதலுக்கு மரணமில்லை என்பதை நிரூபித்த கர்நாடகா வர்த்தகர்..!!!


குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட விசாரணையில், அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. மற்ற விவரங்களை அறிய அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என அகர்வால் கூறினார்.


அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.