உங்கள் தந்தையின் வாழ்க்கை No.1 ஊழல்வாதியாக முடிவடைந்தது: மோடி
ராஜிவ் காந்தி ஒன்றாம் நம்பர் ஊழல்வாதியாக உயிரிழந்தார் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்!!
ராஜிவ் காந்தி ஒன்றாம் நம்பர் ஊழல்வாதியாக உயிரிழந்தார் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்!!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இதுவரையில் நாக்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்து வருகின்றது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிரதமர் மோடி தேர்தல் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியை அவரது கட்சியினர் உத்தமர் என்று கூறுகின்றனர். ஆனால் அவர் ஒன்றாம் நம்பர் ஊழல்வாதியாக உயிரிழந்தார்.
மத்திய பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை, பணமதிப்பிழப்பு, ரஃபேல் ஊழல் என்று காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நான் தங்க கரண்டியோடு பிறந்தவன் இல்லை. என்னுடைய புகழை கெடுக்க காங்கிரஸ் கட்சி என்னைப் பற்றி பொய்யான அவதூறுகள் தெரிவித்து வருகின்றது. சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் காங்கிரசுடன் ரகசிய தொடர்பில் உள்ளன. அனைவரும் இணைந்து என் மீது அவப்பெயர் உண்டாக்க முயல்கின்றனர்.
அது மட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னையும், தனது குடும்பத்தையும் நேர்மையானவர்கள் என மக்கள் மத்தியில் காட்டிக் கொள்ள, என் மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் அவருடைய தந்தை ஊழல்வாதியாக இறந்தார் என்பதை மறந்துவிட்டு அவர் பேசுகிறார்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதை தொடர்ந்து, பிரதமர் மோடியின் இந்த விமர்சனத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் "என் தந்தையைப் பற்றிய உங்கள் உள்நம்பிக்கைகளை பரப்புவது எந்த விதத்திலும் உங்களை பாதுகாக்காது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.