குடியுரிமை திருத்த சட்டத்தை புரிந்து கொள்ள மறுத்து மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, கொல்கத்தாவின் ஹவுரா நகரின் பேளூர் மடத்திற்கு சென்று சுவாமி விவேகானந்தர் மற்றும் அவரது குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.


இந்நிலையில் இன்று பேளூர் மடத்தில் நடந்த தியான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அதன் பிறகு பேசிய போது, “குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நீங்கள் புரிந்து கொண்டதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது.


பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் மதசிறுபான்மையினர் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவ்வாறு அந்நாடுகளில் இருந்து 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காகவே இந்த சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. சிலர் வேண்டுமென்றே இதை புரிந்து கொள்ள மறுத்து மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் என்று கூறினார்.


 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.