குரும்பாச்சி மலையில் சிக்கிய இளைஞர் - 28 மணி நேரமாக தொடரும் மீட்பு முயற்சி
கேரள குரும்பாச்சி மலையில் சிக்கியிருக்கும் இளைஞரை மீட்கும் முயற்சி 28 மணி நேரத்தை கடந்தும் தொடர்கிறது.
சேரட்டைச் சேர்ந்த பாபு என்ற இளைஞர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து குரும்பாச்சி மலைக்கு டிரக்கிங் சென்றுள்ளார். அவர்கள் கீழே இறக்கும்போது தவறி விழுந்த பாபு, செங்குத்து பாறை ஒன்றின் குகைக்குள் சென்று சிக்கிக்கொண்டார். அவரை மீட்க குச்சி, கயிறு உள்ளிட்டவைகளைக் கொண்டு அவரது நண்பர்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. உடனடியாக கீழே சென்ற அவர்கள், காவல்துறையிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் இளைஞரை மீட்க, எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இரவு நேரம் என்பதால் மீட்பு முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டு காலையில் தொடங்கியது. இதில் முன்னேற்றம் ஏதும் இல்லாததால் கொச்சியில் இருந்து கடலோர காவல்படை ஹெலிக்காப்டர் வரவழைக்கப்பட்டது. ஹெலிக்காப்டர் மூலம் கயிறை கொடுத்து பாபுவை மீட்க முயன்றனர்.
அந்த கயிறு பாபுவுக்கு எட்டவில்லை. தொடர் முயற்சிகள் பலனளிக்காமல் மீட்பு முயற்சி ஒருநாளை எட்டியதையடுத்து, இந்திய ராணுவத்தின் உதவியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கோரினார். இதனடிப்படையில் ராணுவத்தினர் மீட்பு பணிக்காக விரைந்துள்ளனர். இதற்கிடையே, மலையில் சிக்கியிருக்கும் இளைஞருக்கு உணவு, தண்ணீர் கொடுக்க முயற்சி எடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டினர்.
மேலும் படிக்க | ஹூண்டாய் விவகாரம்: தென் கொரிய தூதரிடம் வலுவான கண்டனத்தை பதிவு செய்த இந்தியா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR