ஆந்திரா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள YSR காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தனக்கு சொந்தமாக கார் இல்லை என தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

YSR காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவென்டுலா தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி அதற்கான வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.


மேலும் தனது வேட்புமனுவில் தனக்கு ரூ.375 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாகவும், ஆனால் தனக்கு சொந்தமாக வாகனம் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


அதாவது, தனக்கு ரூ.339 கோடிக்கும் அதிகமான அசையும் சொத்துக்களும், ரூ.35 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் YSR காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி.


முன்னாதக கடந்த 2014-ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்ட போது ஜெகன் மோகன் ரெட்டி தனது வேட்புமனுவில் தனக்கு ரூ.343 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 


தொழிலதிபரான இவரது மனைவி பாரதி ரெட்டியின் சொத்து மதிப்பும் ரூ.71 கோடியில் இருந்து ரூ.124 கோடியாக அதிகரித்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டியின் 2 மகள்கள் பெயரில் ரூ.11 கோடிக்கு சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


46 வயதாகும் ஜெகன்மோகன் மீது 31 கிரிமினல்கள் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் CBI தொடர்ந்த வழக்கு மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த பணமோசடி வழக்குகளும் அடக்கம். இருப்பினும் எந்த வழக்கிலும் தண்டனை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.