விசாகப்பட்டினம்: YSR காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மர்ம நபரால் தாக்கப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் YSR காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இந்த விபத்தில் ஜெகன் மோகன் ரெட்டி இடதுகையில் சிறு காயங்களுடன் தப்பினார்.



இன்று காலை விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்தார். அப்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக சுப்பிரமணி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விமான நிலைய CCTV காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


45-வயதாகும் இளம் அரசியல்வாதி ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் YS ராஜசேகர ரெட்டியின் மகன் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இருந்த இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். காங்கிரஸில் இருந்து வெளியேறிய நான்கு மாதங்களுக்கு பின்னர் YSR காங்கிரஸ் கட்சியினை 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கினார். 



தற்போது ஆந்திர மாநிலத்தின் கடப்பா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர அரசாங்கத்தின் எதிர்கட்சி தலைவராக பதவிவகிக்கின்றார் என்பது குறிப்பிடத்ததகது.