ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் வழங்கும் செய்திக்குறிப்பு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை, 10 அக்டோபர் 2024: ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட், பத்ம விபூஷன் திரு ரத்தன் டாடா அவர்களின் சோகமான மறைவுக்கு கனத்த இதயத்துடன் இரங்கல் தெரிவிக்கிறது.  ரத்தன் டாடா அவர்களின் பெயர் பல தலைமுறை இந்தியர்களுக்கு தலைமை, தொலைநோக்குப் பார்வை, இரக்கம் மற்றும் பணி நெறிமுறை ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி, அதன் மூலம் லட்சக்கணக்கான இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்த, கார்ப்பரேட் உலகின் தலைவருக்கு பணிவான அஞ்சலி செலுத்தும் வகையில், ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் எம்டி மற்றும் சிஇஓ திரு. புனித் கோயங்கா, "திரு. ரத்தன் டாடா அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்” ஒன்றை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். அவரது சமூக மற்றும் தொழில்முனைவு முயற்சிகள் மூலம் உலகில் அவர் உருவாக்கிய நேர்மறையான தாக்கத்திற்காக அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், மிகப்பெரிய ஆளுமையாக விளங்கிய திரு.ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இந்த படம் உருவாக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். திரு ரத்தன் டாடா செய்த மகத்தான பணியை தேசத்திற்கும், உலகிற்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு முன்வைக்க வேண்டும் என்று திரு. கோயங்கா நம்புகிறார். இந்த முயற்சியில் ஈடுபட, இந்த திசையை நோக்கி ஜீ அடியெடுத்து வைக்கும்.


ZEEL இன் தலைவர் திரு. ஆர்.கோபாலன், திரு. டாடாவின் திடீர் மறைவால் ஒட்டுமொத்த குழுவும் வருத்தமாக உள்ளதாக தெரிவித்தார். முன்மொழியப்பட்ட திரைப்பட திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அவர், திரு. ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கும் என்று கூறினார். அவரது வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதற்கும், லட்சக்கணக்கானவர்கள் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கும் இந்தப் படம் உலகம் முழுவதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


இந்த திட்டம், டாடா சன்ஸ் குழுமத்திடமிருந்து ஜீ அனுமதியைப் பெறுவதற்கு உட்பட்டது. இந்த திரைப்படத்தின் மூலம் ஜீ ஸ்டுடியோஸ் உருவாக்கும் லாபம் சமூக பணிகளுக்காகவும் ஏழைகளுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும் என்று ஜீ மேலும் தெரிவிக்க விரும்புகிறது. திரைப்படம் உலக அளவில் பிரபலமாவதற்கு, ஜீ ஸ்டுடியோஸ் WION (World is One News) உடன் இணை தயாரிப்பாளராக இணைந்து செயல்படும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் பார்வையாளர்களைக் கொண்ட WION உடன் இணைவதன் மூலம் படத்திற்கு உலகளாவிய அணுகல் கிடைக்கும். திரு. ரத்தன் டாடா அவர்கள் ஒரு உலகளாவிய ஆளுமை என்பதும், உலகளவில் அவரது செயல்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் மரியாதை செலுத்தப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஜீ மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கரண் அபிஷேக் சிங், "ஜீ நியூஸ் குழுமத்தில் உள்ள அனைவரும் ZEEL இன் இந்த நேர்த்தியான, சமயோஜிதமான முன்முயற்சியுடன் இணைந்திருப்பதை பாக்கியமாக உணர்கிறோம். திரு ரத்தன் டாடா அவர்களது ஆன்மாவிற்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்." என்று கூறியுள்ளார்.


ஜீ ஸ்டுடியோவின் தலைமை வணிக அதிகாரி திரு. உமேஷ் பன்சல், “நமது தேசத்தின் சொந்த பிராண்டாக, ஜீ ஸ்டுடியோஸ் முழுக் குழுவும், திரு. ரத்தன் டாடாவின் வாழ்க்கையைப் பற்றிய முழு நீள ஆவணப்படம்/வாழ்க்கைத் திரைப்படத்தில் பணியாற்றுவதில் பெருமை அடைகிறது. திரு. ரத்தன் டாடா உலகம் முழுவதும் உருவாக்கிய ஆக்கப்பூர்வமான தாக்கத்தை இந்த படம் பிரதிபலிக்கும். அத்தகைய மகத்தான ஆளுமையையும் அவரது செயல்களையும் கொண்டாடுவது நமது கடமை என்று நாங்கள் நம்புகிறோம். நாட்டின் வளர்ச்சியில் அவரது பங்களிப்பைப் பற்றிய உண்மைகளையும் அவரது வாழ்க்கையையும் சரியான முறையில் சித்தரிப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம் என்ற உறுதியை நாங்கள் நாட்டிற்கு அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ