புதுடெல்லி: நாட்டிலேயே முதல் முறையாக நெறியாளர் மற்றும் தொகுப்பாளர்கள் அற்ற ஒரே செய்திச்சேனலான ZEE HINDUSTAN TAMIL மூலம், உங்களுக்கு களத்தில் இருக்கும் விவரங்களை நேரடியாக உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். இந்த செய்திச்சேனலின் முக்கிய அம்சம் என்ற வென்றால், நீங்கள் பாருக்கும் நிகழ்ச்சிகளை ஹிந்தி மொழியில் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பார்க்கலாம். உங்களுக்கு விருப்பமான மொழிகளை ரிமோட் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம். ZEE HINDUSTAN தொலைக்காட்சியின் முக்கிய நோக்கமே தேசியம் பேசுவது தான். அந்த தேசிய செய்திகளை, தமிழ் நேயர்கள் ஜீ இந்துஸ்தான் தமிழ் (ZEE HINDUSTAN TAMIL) வலைத்தளத்திலும் படிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய முக்கிய 10 செய்திகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறோம்...!!



1. இந்திய குடிமகன் குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானின் பெரிய முடிவு. ஜாதவ் வழக்கை சிவில் நீதிமன்றத்தில் நடத்த இராணுவ சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும். அதன் மூலம் இராணுவ நீதிமன்றத்துக்கு வெளியே சிவிலியன் கோர்ட்டில் ஜாதவ் வழக்கு நடைபெற அனுமதி.


2. என்சிபி தலைவர் சரத் பவார், தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை தந்துள்ளார். மகாராஷ்டிரா மீண்டும் தேர்தல்கள் நடக்காது என ஆறுதல் கூறியுள்ளார். 


3. மகாராஷ்டிராவில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ஆலோச்னை செய்ய பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் 3 நாள் கூட்டத்தை நாளை  துவக்கும்.


4. மகாராஷ்டிராவில் நடைபெற்ற என்.சி.பி-யின் முக்கிய கூட்டம். காங்கிரஸ்-என்.சி.பி மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் அமைக்கவுள்ள 5-5 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில், சாகன் பூஜ்பால், அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.


5. மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைவது குறித்து என்.சி.பி தலைவர் அஜித் பவார் அளித்த அறிக்கையில்,  புதிய ஆண்டுக்கு முன்பாக மாநிலத்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.


6. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்குப் பிறகு, கூட்டணி அரசாங்க பார்முலா கிட்டத்தட்ட தயாராக உள்ளது. சிவசேனா மற்றும் என்.சி.பி பிரதினிதி முதலமைச்சராக தலா இரண்டரை ஆண்டு இருப்பார்கள். காங்கிரஸ்க்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் எனத் தகவல்.


7. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி நடப்பது குறித்து பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் டிவிட்டரில்  "அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாகி விட்டது" என்று சிவசேனாவுக்கு பதிலடி தந்துள்ளார். 


8. காங்கிரஸ் மற்றும் கர்நாடகாவின் 17 ஜே.டி.எஸ் எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு. தகுதி நீக்கம் செல்லும். ஆனால் அவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு.


9. சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு. என்.சி.பியுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது. சிவசேனா பிரதினிதியே முதலமைச்சராக இருப்பார்.


10. கொல்கத்தாவை ஒட்டியுள்ள தெற்கு பர்கானாவில், பஞ்ச்ஷாயர் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர், நேற்றிரவு ஒரு வாகனத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுக்குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.