ஊடக துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களா நீங்கள்?...
வருங்கால பத்திரிக்கையாளரை தேடும் விதமாக நாடுதழுவிய நுழைவுத் தேர்வினை நடத்த, இந்தியாவின் பிரதாண ஊடக நிறுவனம் ZEE Media முன்வந்துள்ளது!
வருங்கால பத்திரிக்கையாளரை தேடும் விதமாக நாடுதழுவிய நுழைவுத் தேர்வினை நடத்த, இந்தியாவின் பிரதாண ஊடக நிறுவனம் ZEE Media முன்வந்துள்ளது!
Essel குழுமத்தின் கீழ் இயங்கும் ZEE Media நிறுவனம், ஊடகவியல் துறை மாணவர்களுக்கான நாடு தழுவிய நுழைவு தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. இத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு உரிய அங்கிகாரத்துடன் கூடிய பணி வாய்ப்பினையும் வழங்க முன்வந்துள்ளது.
தேர்வின் படிகள்...
சுற்று 1 - Zee Aptitude Test (ZAT) - நாடுதழுவிய திறனாய்வு தேர்வு
சுற்று 2 - மாணவர் பணிகளை சமர்ப்பித்தல்.
சுற்று 3 - செய்தியறை தலைமை ஆசிரியர் உடன் நேர்காணல்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பல்துறை சார்ந்த, மொபைல் ஜர்னலிசம் (MoJo) மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உத்திகளில் பயிற்றுவிக்கப்படுவர்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, பயிற்சியின் முதல் நாளே ZEE குழுமத்தில் பணியாற்றுவதற்கான பணி உத்திரவாத ஆணை வழங்கப்படும்.
9 மாத காலம் நடைப்பெறும் இந்த பயிற்சி வரும் ஏப்ரல்/மே 2019-ல் துவங்கி Zee Institute of Media Arts (ZIMA)-ல் நடைப்பெறும். பயிற்சியில் சேர்கப்படும் மாணவர்கள் பயிற்சி கட்டணமாக 1.5 லட்சம் ரூபாய் மற்றும் GST கூடுதலாக செலுத்த வேண்டும்.
பயிற்சியின் ஒரு பகுதியாக மாதம் ஒன்றுக்கு ரூ.10000 ஊக்கத்தொகை பெரும் வகையிலான தொழிற்பயிற்சியும் அளிக்கப்படும்.
இந்த பயிற்சிக்கான முதற்கட்ட தேடல் தேர்வு வரும் ஜனவரி 27-ஆம் நாள் நடைபெறவுள்ளது. தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் www.zimainstitute.com/zat-registration.aspx என்ற வலைப்பக்கத்தில் ரூ.1000 முன்பணமாக செலுத்தி பதிவு செய்துக்கொள்ளலாம். காலை 10 - 12 வரை நடைப்பெறும் இந்த தேர்வு திறனாய்வு கேள்விகளின் தொகுப்பினை கொண்டு நடத்தப்படும்.
அகர்தலா, அஹமதாபாத், அய்சவால், அம்ரித்ஸர், ஹைதராபாத், பட்டிண்டா, போபால், சண்டிகர், சென்னை, காங்க்டாக், குவாஹாட்டி, குவாலியர், ஹரித்வார், ஹிசார், இம்பால், இந்தூர், இட்டாநகர், கான்பூர், லக்னோ, லூதியானா, மீரட், மும்பை, நாசிக், புதுடெல்லி, நொய்டா, பனாஜி, பாட்டியாலா, பிரயாக்ராஜ், புனே, ஷில்லாங், ஸ்ரீநகர், வாரணாசி, விஷாகாடாபட்னம் ஆகிய பகுதிகளில் இந்த நுழைவுத்தேர்வுக்கு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருத்தல் வேண்டும். மற்றும் பட்டய படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான CGPA-ஐ பெற்றிருக்க வேண்டும். இளங்கலை பட்டம் இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.