Zee News AI Exit Poll: 18வது மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. ஏப். 19ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதியான இன்றுடன் முடிகிறது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் நாளை (ஜூன் 2)  தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரிய பாய்ச்சல்


நாடு முழுவதும் உள்ள ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் (Exit Poll) முடிவுகளை அறிவிக்க உள்ளன. அந்த வகையில், Zee News தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை மேற்கொள்வதில் ஒரு பெரிய பாய்ச்சலை செலுத்தியுள்ளது எனலாம். அமெரிக்காவின் டேட்டா பகுப்பாய்வு நிறுவனத்தின் துணை நிறுவனமான India Consolidated Private Limited உடன் இணைந்து Zee News தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையில் ஒரு புதிய தரத்தை அமைத்திருக்கிறது எனலாம். அதாவது இது Zee News ஊடகத்தின் AI Exit Poll ஆகும். இதன்மூலம், இந்திய ஊடகங்களின் தேர்தல் முடிவுகள் மீதான பார்வையையும், கணிப்பையையும் குறித்த பார்வையை மாற்றியமைக்கும். 


மேலும் படிக்க | பிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைத்த முதல் பிரதமர் மோடி: மன்மோகன் சிங் கடும் தாக்கு


10 கோடிக்கும் மேல்...


Zee News AI Exit Poll: தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு என்றாலே மக்களிடம் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுடன், ஊடகங்கள் கைக்கோர்த்து இந்த ஆய்வினை மேற்கொள்ளும். இந்த ஆய்வுகள் சில ஆயிரம் பேரிடமும், சில லட்சம் பேரிடமும்தான் நடத்தப்படும். எனவே இந்த AI Exit Poll மீதான நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தை உறுதிசெய்யும்போது, Zee News - ICPL இணைந்து நாடு முழுவதும் உள்ள 542 மக்களவை தொகுதிகளில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


நம்பகமானது மற்றும் துல்லியமானது


எப்போதும் கருத்துக்கணிப்பு என்றாலே அது மக்கள் தெரிவிக்கும் கருத்தை பொருத்தே அதன் முடிவுகள் அமையும் எனலாம். கருத்துக்கணிப்புகள் மேற்கொள்ளப்படும் மக்கள் ஒரு சார்பானவர்களாக கூட இருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, இது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, Zee News ஊடகம் இதில் முதல்முறையாக வாக்காளர்களின் கருத்துக்களை செயற்கை தொழில்நுட்பம் (Artificial Intelligence) மூலம் பெற்றுள்ளது. இதன்மூலம், ஒரு சார்பு கருத்துகளுக்கு வாய்ப்பே இல்லை எனலாம். அந்த வகையில், Zee News ஊடகத்தின் இந்த AI Exit Poll சார்பற்றது, நம்பகமானது மற்றும் துல்லியமானது என்பது உறுதியாகிறது. 


Zee News ஊடகத்தால் செயற்கை நுண்ணறிவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த AI Exit Poll என்பது பத்திரிகை துறை சார்ந்த கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது எனலாம். மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அல்காரிதமை பயன்படுத்துவதன் மூலம், Zee News ஊடகம் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதியளிக்கின்றன, இது பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் மொழிகளில் உள்ள வாக்காளர்களின் நுணுக்கமான உணர்வுகளை பிரதிபலிக்க முயல்கிறது.


மேலும் படிக்க | அம்பானி வீட்டு கல்யாணம்னா சும்மாவா.. இத்தனை கோடிகளா!!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ