ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தின் போது அல்வாரில் காங்கிரஸ் தலைவர் நவாஜோத் சிங் சித்து உரையாற்றிய ஒரு கூட்டத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. காரணம் இந்த வீடியோவில் சிலர் பாக்கிஸ்தான் சார்புக் கோஷங்களை எழுப்பியது தான. ZEE News இந்த வீடியோவை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கியதுடன் பேரணியில் எழுப்பப்பட்ட "பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்" கோஷங்களின் மீது காங்கிரஸ் மற்றும் சிதுவின் நிலைப்பாட்டை கேள்வி எழுப்பினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும், காங்கிரஸ் தலைவர்கள் இவ்விவகாரதில் தலையிட்டு, ZEE News இந்த வீடியோவை சித்தரித்து வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். இவ்விவகாரத்தில் சித்து ஒரு படி மேலாக, ZEE News மீது அவதூறு வழக்கு தொடுக்கவுள்ளதாகவும் எச்சரித்தார்.



இந்த விவகாரத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ZEE News-க்கு எதிராக சமூக ஊடகங்களில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். சில ஊடகங்களும், செய்தியாளர்களும் காங்கிரஸ் தொண்டர்களின் செயல்பாட்டிற்கு ஆதரவு அளித்து செய்திகளை பரப்பினர்.



இந்நிலையில் இந்த விவகாரத்தில் கவனம் கொண்ட ZEE News, உண்மையினை மக்களுக்கு தெரியபடுத்து கடமை பட்டுள்ளது.


ZEE News குழு, சிதுவின் அல்வார் பேரணியில் கலந்து கொண்ட பொது மக்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொண்டது. குறிப்பிட்ட பேரணியின் போது பத்திரிக்கையாளர்களால் பதிவு செய்யப்பட்ட 7 வெவ்வேறு வீடியோக்களை ZEE News பெற்று ஆய்வு நடத்தியது. இந்து ஆய்வில், சித்துவின் பேரணியில் எங்கிருந்து "பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்" என்ற கோஷம் எழுந்தது என்பது உள்ளூர் பத்திரிக்கையாளர் வீடியோ ஒன்றின் மூலம் வெளியாகியுள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக ZEE News தலைமை ஆசிரியர் சுதிர் சௌத்ரி, காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா-விடம் ட்விட்டரின் வாயிலாக உண்மையினை வெளிப்படுத்தியுள்ளார். ZEE News போலியான வீடியோவினை பரப்பிவருகின்றது என அனைவரும் குற்றம்சாட்டி வந்த நிலையில், எமது தலைமை ஆசிரியர் இரண்டு வீடியோக்களையும் மக்கள் மத்தியில் வைத்து காங்கிரஸின் போலி முகத்திரையினை கிழித்துள்ளார்.



ZEE News செய்திகளுக்கு எதிராக போர்கொடி எழுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு JNU பல்கலை., கழகத்தில் இந்தியாவிற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதை ZEE News முக்கியதுவம் ஆக்கியபோதும் இதேப்போன்று சர்ச்சைகள் எழுந்தது. இருப்பினும், தடயவியல் சோதனையில் குற்றம்சாட்டப்பட்ட வீடியோ உண்மையானவை தான் என கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.